Posts

கல்வி நிலைய மரணங்கள்...

Image
  “ முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம் . என்ன செய்வது ?? அவள் பெயர் ஃபாத்திமா லத்தீஃப் என்றாகி விட்டதே ” – சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் மரணத்தை அடுத்து , அவரது தாயார் சுஜிதா நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தான் இவ்வாறு தெரிவித்திருந்தார் . எத்தனை வலி நிறைந்த வார்த்தைகள் இவை . அடையாளங்களை மறைத்து கொண்டு வாழும் நிலைக்கு ஒரு பிரிவினரை இந்த சமூகம் தள்ளியிருக்கிறது என்பது எவ்வளவு கொடூரமானது .   தற்கொலை செய்வது ஒன்றும் அத்தனை எளிதானது கிடையாது . வாழ்வின் மீதான தீராத வெறுப்பை நோக்கி தள்ளப்படுகிற ஒரு இதயத்தால் மட்டுமே , தற்கொலையை தீர்வாக கருத முடிகிறது . தற்கொலையே தீர்வு என கருதுகிற அளவுக்கு ஒரு இதயம் செல்கிறது என்றால் , அது எவ்வளவு காயப்படுத்தப்பட்டிருக்கும் ? எண்ணற்ற கனவுகளை சுமந்து கொண்டு , எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து , ஒடுக்குமுறைகள் அனைத்தையும் முட்டி மோதி எழுந்து , இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் என போற்றப்படுகிற ஐஐடியில் இடம் கிடைத்து வந்து சேர்கிற ஒருவனோ , ஒருத்தியோ செத்து போய்விடலாம் என எண்ணத் த

பாட்டுக்கோட்டையின் தலைவன் பட்டுக்கோட்டை

Image
நூறாண்டு கடந்த தமிழ் சினிமாவில் தனக்கானதொரு பாட்டுக்கோட்டையை கட்டியெழுப்பிய கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இருப்பத்தி ஒன்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து விட்டு சென்றவன் தான். வெறும் இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவன் தான். ஒரு பாடலுக்கு 500 ரூபாய் ஊதியம் எனக் கொண்டாலும், இரண்டு லட்சம் ரூபாய் கூட வருவாய் பெறாத புலவன் தான். எனினும், தமிழ் இருக்கும் வரை தன் பெயர் இருக்கும் படி தனது தடத்தை அழுத்தமாகப் பதித்து விட்டு சென்றிருக்கிறான் அந்த மா கவிஞன். ஒருமுறை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை காண சென்றிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர், தங்கள் பத்திரிக்கையில் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் எனக் கோரினார். அந்த பத்திரிக்கையாளரை அழைத்துக் கொண்டு நடந்து சென்ற பட்டுக்கோட்டை, பின்னர் ரிக்ஷாவில் ஏறிச் சென்றார். பின்னர் பேருந்திலும், சிறிது தூரம் சென்ற பின் காரிலும் பயணித்து பாடல் பதிவு கூடத்தை சென்றடைந்தார். அப்போது பத்திரிக்கையாளர் வாழ்க்கை வரலாறு எழுதும் கோரிக்கையை நினைவூட்டினார். இதற்கு பதிலளித்த பட்டுக்கோட்டை, முதலில் நடந்தேன், பிறகு ரிக்ஷாவில் போனேன், பிறகு பேருந்தில் சென்றேன்.